Showing posts with label ஆடிப்பெருக்கு. Show all posts
Showing posts with label ஆடிப்பெருக்கு. Show all posts

Saturday, October 31, 2009

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு

தமிழ் வருடங்கள் 60. தமிழ் மாதங்கள் 12. இதில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பல மாதங்களுக்கு பழமொழிகளும் உண்டு.

தை பிறந்தால் வழி பிறக்கும், புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும், ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளன.

ஆடி-18 தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தொடும் ஊர்களில் எல்லாம், இன்றைக்குக் கொண்டாட்டம். சுழித்தோடும் காவிரியில் கால் நனைத்து, இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தி குடும்பத்தோடு காவிரியை வரவேற்கும் நாள்.

இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.